• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவனை கடத்தி பெட்ரோல் ஊற்றி எரிப்பு

November 14, 2017 தண்டோரா குழு

திருப்பத்தூர் அருகே மர்ம நபர்கள்  பள்ளி மாணவனை கடத்தி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தாதனவலசை பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் கோவிந்தன்(14).இவர் வெங்களாபுரம் தனியார் பள்ளியில் 9வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல் காலையில் மிதிவண்டியில் பள்ளிக்கு செல்லும் போது அவரை நேதாஜி நகர் அருகே  டாடா ஏசி வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வழிமறித்து மாந்தோப்பிற்கு தூக்கி சென்று உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

அவர்களிடம் தப்பித்த வந்த மாணவனை அருகே உள்ள ஊர்பொதுமக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமணையில் சேர்த்து உள்ளனர்.மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க