• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜி.எஸ்.டி வரியால் 30 சதவீத வர்த்தகம் புதுவையில் பாதிப்பு-முதலமைச்சர் நாரயணசாமி

November 13, 2017

கேரளாவில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி நடை பயண துவக்க விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதுவை முதலமைச்சர் நாரயணசாமி இன்று கோவை வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

புதுவையில் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார் என விமர்சித்தவர்,அன்றாடம் அரசின் செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கோ, துணை நிலை ஆளுநருக்கோ உரிமை இல்லை.பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வளர்ச்சி ஏற்படவில்லை மாறாக பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

சரக்கு மற்றும் சேவை வரியால் மேலும் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் ,மத்திய அரசு வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாக்கப்படும் என கொடுத்த வாக்குறுதிபடி நிறைவேற்றப்படவில்லை எனக் கூறினார்.

தற்போது மத்திய பாஜக அரசு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,
புதுச்சேரி மாநில அரசு மக்கள் நல திட்டங்களில் உறுதியாக இருக்கும் நிலையில்,கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்களுக்கு தடை போடுகிறார் என குற்றம் சாட்டினார்.

அரசின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளை அழைத்து பேச ஆளுநருக்கோ துணை நிலை ஆளுநருக்கோ அதிகாரம் இல்லை எனவும்,மாநில அரசு நிர்வாகங்களில் மத்திய அரசின் தலையீடு அதிகரித்துள்ளதால் அதிகம் பாதிக்கப்பட்டது புதுவை மாநிலம் தான் என குற்றச்சாட்டினார்.

மேலும்,மக்கள் நல திட்டத்தை நிறைவேற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட்வர்களுக்கு அதிகாரம் உண்டு அதனை முடக்க நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு உரிமை இல்லை என்பதே எங்களது வாதம்.

வருமான வரித்துறைக்கு சோதனை மேற்கொள்ள அதிகாரம் உண்டு ஆனால் அதில் பாரபட்சம் இருக்க கூடாது எனவும்,புதுவையில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதால்
தான் வறட்சியிலும் புதுவையில் மக்கள் பாதிக்கப்படவில்லை .

மத்திய அரசு நிதியளிக்காவிட்டாலும் நலத்திட்ட உதவிகளை நிறுத்தவில்லை.ஆனால் தாமதமாகிறது என்றும் அதற்கு காரணம் துணை நிலை ஆளுநரே எனவும் கருத்து தெரிவித்தார்.புதுவையில் இருந்து கோவை ,திருப்பதி,ஹைதராபாத் என முக்கிய நகரங்களுக்கு விமான சேவை வசதி மேற்கொள்ளப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரியில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கு முறையற்ற அதிக வரி விதிக்கப்பட்டதை குறைக்க தொடர்ந்து வலியுறுத்தி,தற்போது அதனை அரசே குறைக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிருப்பதாக குறிப்பிட்டார்.

வருமான வரித்துறை மத்திய அரசுக்கு பணியாத நபர்களை, வியாபாரிகளை , பணியவைக்க சோதனை செய்கின்றனர்.மூன்று நியமன எம்.எல்.ஏ க்கள் பதவி ரத்து விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் தான் கேட்க வேண்டும்.

ஜி.எஸ்.டி வரியால் 30 சதவீத வர்த்தகம் புதுவையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரியை 12 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க