• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் சரணடைந்தனர்

November 13, 2017 தண்டோரா குழு

கோவையில் இடத்தகறாறு காரணமாக பழனிச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் ஏ.எஸ்.குளம் கிராமநிர்வாக அலுவலர் முன்பு சரணடைந்தனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்த அக்ரானம் பகுதியில் நேற்று இரவு இடத்தகறாறு காரணமாக பழனிச்சாமி மற்றும் ரங்கசாமி இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், ரங்கசாமி மற்றும் அவரது மகன் ஏசுகுமார் ஆகியோர் பழனிச்சாமியை கத்தியால் குத்தினர். இதில் பழனிச்சாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரங்கசாமி மற்றும் அவரது மகன் ஏசுகுமார் ஏ.எஸ்.குளம் கிராமநிர்வாக அலுவலர் ஹேமா முன்பு சரணடைந்தனர். இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க