November 13, 2017
தண்டோரா குழு
கேரளாவில் பாகுபலி ஸ்டைலில் யானை மீது ஏற முயன்ற வாலிபரை யானை தூக்கி வீசியது.
பாகுபலி2 படத்தில் பிரபாஸ் மதம் பிடித்த யானையை சமாதானம் செய்து அதன் மீது ஏறுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தன் நண்பரிடம் பேஸ்புக்கில் லைவ் வீடியோ செய்ய சொல்லி யானைக்கு பழங்களை வழங்கியுள்ளார்.
பின்னர், அந்த இளைஞர் பாகுபலி பிரபாஷ் ஸ்டைலில் யானை மீது ஏற முயன்றார். அப்போது அந்த யானை அவரை ஒரே முட்டாக முட்டி தூக்கி வீசியது. இதையடுத்து தூக்கி வீசட்ட அந்த இளைஞர் சில அடி தூரம் சென்று மயங்கியபடி விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை மீட்டு
அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.