• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் சசிகலா உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு

November 13, 2017 தண்டோரா குழு

சசிகலா குடும்பத்தினர் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை முழுமையாக நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த சோதனை வரி ஏய்ப்பு புகாரின் எதிரொலியாக சசிகலா குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும்,ஜெயா டிவி அலுவலகம் மற்றும் அதற்கு தொடர்புடைய ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 160 இடங்களிலும் ஜெயா டிவிக்கு தொடர்புடைய நிறுவனங்களிலும், அதன் உரிமையாளர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிப்பார்க்கும் பணி நடந்து வருவதாகவும்,சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள் இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க