• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரான்சில் முதல்முறையாக விண்வெளிக்கு சென்று வந்த பூனைக்கு வெண்கல சிலை!

November 13, 2017 தண்டோரா குழு

முதல்முறையாக விண்வெளிக்கு சென்று வந்த பூனைக்கு பிரான்சில் வெண்கல சிலை அமைக்கப்படவுள்ளது.

கடந்த 1963ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி ‘ஃபெலிசெட்’ என்னும் பூனை‘வெரோனிக் ஏஜி1’ என்ற ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 157 கிலோமீட்டர் உயரத்துக்கு சென்றுவிட்டு, சுமார் 15 நிமிடத்துக்கு பிறகு, பாராசூட் மூலம் பத்திரமாக உயிருடன் தரையிறங்கியது.

அந்த விண்வெளி பயணத்தின் மூலம் முதல்முறையாக விண்வெளிக்கு சென்ற பூனை என்ற பெருமையையும் பெற்றது. ‘ஃபெலிசெட்’பூனைக்கு பிறகு, நாய், குரங்கு மற்றும் குரங்கு இனத்தை சேர்ந்த சிம்ப்பன்சி ஆகியவை விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.

தற்போது, பிரான்ஸ் நாட்டில் ‘ஃபெலிசெட்’பூனைக்கு ஒரு வெண்கல சிலை விரைவில் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக,லண்டன் நகரில் பணிபுரியும் கிரியேட்டிவ் இயக்குநர் மாத்யூ செர்ஜ் என்பவர் ‘கிக்ஸ்டார்டர்’ என்னும் இணையதளத்தை தொடங்கி, அதன் மூலம் நிதி திரட்டி வருகிறார்.

மேலும், ‘லைகா’ என்னும் நாய், ‘ஹாம்’ என்னும் சிம்ப்பன்சி விண்வெளிக்கு சென்று வந்ததை மக்கள் நினைவு கூறுகின்றனர். ஆனால் ‘ஃபெலிசெட்‘ என்னும் பூனையும் விண்வெளிக்கு சென்று வந்ததை மக்கள் மறந்துவிட்டனர்.இதனை சரி செய்ய ‘ஃபெலிசெட்’ க்கு ஒரு வெண்கல சிலை அமைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்” என்று லண்டனில் பணிபுரியும் கிரியேட்டிவ் இயக்குநர் மாத்யூ செர்ஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க