November 13, 2017
தண்டோரா குழு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்ய தொடங்கியது.எண்ணூரில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரியில் 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.