சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியானவர்களுக்கு நிவாரணம் கேட்டு போராடிய சமூக ஆர்வலர்கள் மூன்று பேரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்தனர்.
கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரண தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, சமூக ஆர்வலர் பிரபாகரன், மனோகரன், வேலுச்சாமி ஆகியோர் கடந்த 6 ம் தேதி போராட்டம் நடத்தினர்.
கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்திய 3 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்த காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து 3 பேரும் கோவை மத்திய சிறையில் இன்று 6வது நாளாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் மூன்று பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதனயடுத்து சமூக ஆர்வலர்கள் மூன்று பேரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்தனர். அந்த புகாரில் காவல்துறை அமைதி வழியில் போராடிய தங்களை பொய் வழக்கு போட்டு கைது செய்ததாகவும், தொடர்ச்சியாக கருமத்தம்பட்டி காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர். மேலும் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் இறந்த ஐந்துபேரின் குடும்பத்திற்கு நாகை அரசு பேருந்து பணிமனையில் இறந்தவர்களைப்போல நஷ்ட ஈடு வழங்கக்கோரியும், தமிழக அரசு கட்டிய கட்டிடங்களை ஆய்வுக்கு உட்படுத்தி மேலும் உயிர்ப்பலி நடக்காமல் இருக்க வலியுறுத்தினர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு