November 11, 2017
தண்டோரா குழு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரமடைந்துவருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வந்தது.
இந்நிலையில்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும்,வடகடலோரா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.