• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொழிலதிபர் ஆறுமுகசாமி மற்றும் சஜீவன் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

November 11, 2017

கோவையில் தொழிலதிபர் ஒ.ஆறுமுகசாமிக்கு சொந்தமான வணிகவளாகத்திலும், தொழிலதிபர் சஜீவனின் வீட்டிலும் தொடர்ந்து மூன்றாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அதிமுக அம்மா அணியின் பொது செயலாளரான சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள மணல் ஒப்பந்ததாரர் ஓ.ஆறுமுகசாமி மற்றும் தொழில் அதிபர் சஜீவனுக்கு சொந்தமான வீடு மற்று அலுவலகம் உள்ளிட்ட ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் தொழிலதிபர் ஓ.ஆறுமுகசாமிக்கு சொந்தமான பந்தய சாலையில் உள்ள வீடு மற்றும் ராம் நகரில் உள்ள அலுவலகத்தில்  நேற்று இரவுடன் சோதனை முடிவடைந்தது. அங்கு நடைபெற்ற சோதனையில் சில முக்கிய ஆவணங்கள், பணபரிவர்த்தனை, சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிற்து.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் ஆறுமுகசாமிக்கு சொந்தமான அவினாசி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. இதே போல் தொழிலதிபர் சஜீவனுக்கு சொந்தமான 3 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஆர்.எஸ்.புரம் மற்றும் போத்தனூர் அலுவலகங்களில் சோதனை நிறைவு பெற்றது.

அதில் கிடைத்த ஆவணங்களில் அடிப்படையில்,கோவை போத்தனரில் உள்ள அவரது இல்லத்தில் மூன்றாவது நாளாக அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இரு இடங்களில் இன்றோடு அதிகாரிகளின் சோதனை முடியும் எனவும், அதில் பல முக்கியதுவம் வாய்ந்த ஆவணங்கள் கைப்பற்றப்படும் என எதிர்க்கப்படுகிறது.

மேலும் படிக்க