• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எங்கள் மீது குறை கூறுபவர்கள் காந்தியின் வாரிசு அல்ல – டிடிவி தினகரன்

November 11, 2017 தண்டோரா குழு

எங்கள் மீது குறை கூறுபவர்கள் காந்தியின் வாரிசு அல்ல என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சசிகலா மற்றும் தினகரனுக்கு சொந்தமான பல இடங்களில் மூன்றாவது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,

வருமானவரி சோதனைக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி.புதுச்சேரியில் உள்ள எனது இல்லத்தில் பாதாள அறை எதுவும் இல்லை.கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது ஏன்?வருமான வரித்துறை சோதனை முடிந்த பிறகு உண்மை தெரிய வரும்.கைப்பற்றப்படும் பணம், நகைகள் அனைத்தும் பதுக்கப்பட்டது அல்ல.வருமான வரி சோதனைக்காக ஒரே இடத்தில் கார்களை வாடகைக்கு எடுத்தது ஏன்? என தினகரன் கேள்வி எழுப்பினார்.

மேலும்,1996 ஆம் ஆண்டு கூட எங்கள் வீட்டில் சோதனை நடைபெற்றது. இதுபோன்ற சோதனை வழக்கமாக நடைபெறுவது தான், எங்கள் கட்சி சிறிய கட்சி தான் பிறகு எதற்கு எங்களை தொந்தரவு செய்கிறார்கள்? ஐடி அதிகாரிகள் தவறான தகவலை தெரிவிக்கவில்லை. தங்களை குற்றம் சாட்டி வருபவர்கள் காந்தியின் வாரிசுகள் அல்ல. கட்சியை காப்பாற்ற நாங்கள் போராடி வருகிறோம். அதனை தடுக்க ஏதோ உள்நோக்கத்துடன் தான் இது நடக்கிறது எனக் கூறினார்.

மேலும் படிக்க