• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கிய லட்சுமி குறும்படம்

November 10, 2017 தண்டோரா குழு

சமீப காலமாக வெப் சீரியஸ் என்பது பரவி வருகிறது. பல முக்கிய பட நிறுவனங்களும் அப்படிப்பட்ட வெப் தொடர்களை தயாரித்து யு டியூபில் வெளியிட்டு வருகிது. அதைபோல் பல குறும்படங்களையும் தயாரித்து வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் இயக்குனர் கெளதம் மேனனின் யு டியூப்க்கான ஒன்றாக என்டர்டயின்மென்ட் சார்பில் லட்சுமி என்ற குறும்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. சர்ஜுன் கே.எம் இயக்கியுள்ள இக்குறும்படம் ஒரு பெண்ணின் பாலியல் சுதந்திரத்தை பற்றியது. ஒளிப்பதிவு, நேர்த்தியான தொழில்நுட்பம், தரமான நட்சத்திர தேர்வு என களைகட்டி இருக்கும் இப்படம் சர்வதேச அளவில் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது. ஆனால், லட்சுமி குறும்படம் சமூக வலைத்தளத்தை பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

நடுத்தர வர்க்க பெண்ணின் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படம் ஒரு பெண்ணின் இருளான பக்கங்களை அளாசியிருகிறது. இப்படம் ஆண்கள் தேவைக்கு பயன்படும் ஒரு பொருளாகவே பெண்கள் பார்க்கப்படுகிறார்கள் என்று சொல்கிறது.

படத்தில் கணவன் ஒரு பெண் தோழியை வைத்திருப்பதால் அவனது மனைவியும் ஒரு ஆண் நண்பருடன் பழகி அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது போல் காட்சியுள்ளது. சில உண்மைகளை வெளிப்படையாக இப்படம் பேசுவதால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுமட்டுமின்றி, பாரதியாரின் பாடலைப் பயன்படுத்தியிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதியார் எப்போது கள்ளகாதலை ஆதரித்துள்ளார் என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.எனினும், இப்படம் பெண்ணின் உணர்வை பேசும் படமாக இருக்கிறது என்றும் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க