• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனிதாவின் நினைவாக ஏழை மாணவர்கள் படிப்பிற்கு ரூ.50 லட்சம் அளித்த விஜய் சேதுபதி

November 10, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாகி மாஸ் என்ட்ரி கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி. இவர் தற்போது அனில் சேமியா நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விளம்பரத்தில் நடிப்பதன் மூலம் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை பின்தங்கிய மாவட்டமான அரியலூர் மாவட்டத்தின் கல்வி பணிகளுக்காகவழங்கி உள்ளார்.

இதையொட்டி நடந்த விழாவில் விஜய் சேதுபதி பேசிய விஜய் சேதுபதி,

நான் விளம்பர படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.இப்போது, அணில் உணவு வகைகளின் விளம்பரத்தில் நடித்துள்ளேன்.

இந்த விளம்பரப் படத்தில் நடித்ததற்காக எனக்கு கிடைத்துள்ள தொகையில், ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன்.கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக அரியலூர் இருக்கிறது.

இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் 38 லட்சத்து எழுபது ஆயிரம் ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா 50 ஆயிரம் வீதம் 5 லட்சம் ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா 50 ஆயிரம் வீதம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், மொத்தம் 49 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளேன்.

கல்வியில் பின் தங்கிய மாவட்டமான அரியலூரில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்து டாக்டராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர் நீத்த அனிதாவின் நினைவாக இந்தத் தொகையை வழங்குகிறேன் என்றார்.

மேலும் படிக்க