• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமணம் என்ற பெயரில் பெண்களை அடிமைகளாக மாற்றுகிறது தமிழ் சமுதாயம் – இயக்குநர் மு.களஞ்சியம்

November 10, 2017 தண்டோரா குழு

திருமணம் என்ற பெயரில் பெண்களை அடிமைகளாக மாற்றுகிறது தமிழ் சமுதாயம் என திரைப்படஇயக்குநர் மு.களஞ்சியம் கூறியுள்ளார்.

கோவில்பட்டியை சேர்ந்த சங்கரநாரயணன் – கோமதி தம்பதியின் மகன் வைரமயில். இவர் கோவில்பட்டியில் பள்ளி மற்றும் டிப்ளமோ படிப்பினை முடித்து, ஓசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ முடித்துள்ளார். அதன் பின்பு தன மேற்படிப்புக்காக ஸ்வீடன் நாட்டிற்கு சென்ற அவர் அங்கு தனது மேற்படிப்பினை முடித்த பின்பு அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.

தமிழ் மொழி மற்றும் கலைகளில் ஆர்வம் கொண்ட வைரமயில் சல்சா நடனம் பயில சென்றுள்ள போது ஜெர்மனியை சேர்ந்த பீட்ரிச்சை சந்திதுள்ளார். அப்போது இருவரும் நண்பர்களாக பழகி பின்னர் அது காதல் மலர்ந்துள்ளது. கடந்த 1 வருடமாக காதலித்த இருவரும் தங்கள் காதலை பெற்றோர்களிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் பெற்று இருவரின் திருமணம் இன்று கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முதலில் தமிழ்முறைப்படி, மேளதாளம் முழங்க திருமணம் நடைபெற்றது.பின்னர் கிறிஸ்துவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.இந்த திருமணத்தினை திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் நடத்தி வைத்தார்.

பின்னர் இயக்குநர் மு.களஞ்சியம் பேசும்போது,

தமிழ் இளைஞர்கள்,பெண்கள்,தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முன்வர வேண்டும். பெண்களை தமிழ் சமுதாயம் அடிமைகளாக மாற்றுகிறது. காதல் மற்றும் தமிழ் முறைப்படியான திருமணங்களால் மட்டும் தான் முடியும். இத்தகைய திருமணங்கள் தான் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும், பெண்களுக்க சம உரிமை கொடுத்தால் தான் வீட்டு நிர்வாகமும், நாட்டு நிர்வாகம் நன்றாக இருக்கும் என்றார்.இத்திருமண நிகழ்ச்சியில் வைரமயில் உறவினர்கள், மற்றும் பீட்ரிச் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க