• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 177க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி குறைப்பு

November 10, 2017 தண்டோரா குழு

கவுக்காத்தியில் இன்று நடைப்பெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 177க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

கவுக்காத்தியில் 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் இன்று நடைப்பெற்றது.இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 177க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஷேவிங் கிரீம், பற்பசை, ஷேம்பு உள்ளிட்ட அழகு சாதன பொருட்களின் வரி 29% லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்களின் மீதான வரி 18% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

விளைபொருட்கள் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான வரி 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.செங்கல் தொழில் தொடர்பான சில்லறை வேலைகள் மீதான சேவை வரி குறைப்பு.விவசாய டிராக்டருக்கான சில பிரத்யேக பாகங்கள் மீதான வரி 28% லிருந்து 18% ஆக குறைப்பு.

மேலும்,திரைப்படம் தொடர்பான சாதனங்கள், கருவிகளுக்கு 28% லிருந்து 18% ஆக வரியை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாலையில் வெளியிடுவார் என்று தெரிகிறது.

மேலும் படிக்க