• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாடிகன் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடை – போப்பாண்டவர் பிரான்சிஸ்

November 10, 2017 தண்டோரா குழு

போப்பாண்டவர் பிரான்சிஸ் வாடிகன் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடைவித்துள்ளார்.

கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் புனித தளமாக, இத்தாலி நாட்டிலுள்ள வாடிகன் நகரம் சிறந்து விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இந்த புனித தளத்திற்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் இங்கு சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து
போப்பாண்டவர் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் ஆரோகியமான வாழ்க்கை வாழ, இந்த சிகரட்டை தடை ஒரு நல்ல எடுத்துகாட்டு. எனினும், மக்களுடைய ஆரோக்கியத்தை பாதிக்கும் இது போன்ற செயலுக்கு வாடிகன் நகரம் ஒருபோதும் ஆதரவு அளிக்காது என்று போப் பிரான்சிஸ் முடிவெடுத்துள்ளார்.

மேலும், வத்திக்கான் ஊழியர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட பலவற்றில் சிகரெட்டுகள் ஒன்றாகும்.தங்களுக்கு கிடைத்துள்ள சலுகைகளை பயன்படுத்தி சிகரெட் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்கின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், உலக சுகாதார அமைப்பை மேற்கோள் காட்டி, புகைபிடிக்கும் பழக்கத்தால்,உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் ஏழு மில்லியன் மக்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர் என்று வாடிகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க