• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

November 9, 2017 தண்டோரா குழு

கோவையில் செந்தில் குரூப் நிறுவனங்களின் நிறுவனர் ஆறுமுகசாமி வீடு உள்ளிட்ட 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலா உறவினர் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருக்கின்றனர்.

மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் பந்தயசாலை பகுதியில் உள்ள வீடு, அவரது மகன் செந்திலுக்கு சொந்தமான அவிநாசி சாலையில் உள்ள அலுவலகம், ராம் நகர் பகுதியில் உள்ள விஜயலட்சுமி அறக்கட்டளை மற்றும் சிறுமுகை, காரமடை பகுதியில் உள்ள நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

அதைப்போல் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த சஜீவனுக்கு சொந்தமான போத்தனூர் மற்றும் ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள நீலகிரி பர்னிச்சர் கடையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோடநாடு பங்களாவிற்கு தொடர்புடைய ஆறுமுகசாமி மற்றும் சஜீவன் நிறுவனங்களில் சோதனை நடைபெறுவதாகவும், அப்பங்களாவில் பல்வேறு பணிகளை ஆறுமுகசாமியும், மரவேலைகளை சஜீீவனும் செய்து கொடுத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொடநாடில் நடந்த காவலர்கள் கொலை வழக்கு விசாரணை வளையத்துக்குள் சஜீீவன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க