• Download mobile app
14 Oct 2025, TuesdayEdition - 3534
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆலு பன்னீர் கோப்தா

November 9, 2017 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 200 கிராம் (துருவியது)
உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து, மசித்தது)
பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1 1/2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி, லேசாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு வேண்டிய வடிவத்தில் அவற்றை அடிவமைத்து கொள்ளலாம். பின்பு ஒரு காடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான். சுவையான ஆலு பன்னீர் கோப்தா தயார். இதனை தக்காளீ சாய்ஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க