• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலா குடுபத்திற்கு செக் : மொத்தம் 187 இடங்களில் ரெய்டு !

November 9, 2017 தண்டோரா குழு

சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரின் எதிரொலியாக சசிகலா, தினகரன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜெயா டிவி அலுவலகம் மற்றும் அதற்கு தொடர்புடைய ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 160 இடங்களிலும் ஜெயா டிவிக்கு தொடர்புடைய நிறுவனங்களிலும், அதன் உரிமையாளர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூரு அதிமுக தலைமை அலுவலகம், தாம்பரம் அருகேயுள்ள மிடாஸ் நிறுவனம் உள்ளிட்டவற்றிலும் வருமானவரித்துறையினர் தங்களது சோதனையை நடத்தி வருகின்றனர்.

மேலும் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட 187 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க