• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாக்லா கிராமத்தை அடுத்து சச்சினால் உயிர்த்தெழுந்த ஜங்கல்மஹல் பள்ளிகள்.

June 23, 2016 தண்டோரா குழு

மாவோயிஸ்டிக்களின் நடமாட்டம் மிகுந்தது வங்காளத்தின் ஜங்கல்மஹல் பகுதி. கிரிக்கெட் வீரரும், பாராளுமன்ற MPயுமான சச்சின் டெண்டுல்கரின் தயாளகுணத்தால் இங்குள்ள இரண்டு பள்ளிகள் உயிர்த்தெழுந்துள்ளன.

சில வருடங்களுக்கு முன்பு வரை மேற்கு மிட்னபுர்ல் உள்ள கோபிண்டபுர் மகரம்புர் ஸ்வர்னமொயீ சஸ்மல் சிக்ஷா நிகேதன் பள்ளி ஆடு மாடுகள் வசிக்கும் இடம்போல் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அடிப்படை தேவைகள் கூட இல்லாத பள்ளியாக இருந்தது. இடிந்து விழுந்துவிடும் போன்ற பள்ளிக் கட்டிடங்களும் படிப்பதற்குத் தேவையான எந்த வசதிகளும் இல்லாத வகுப்பறை, பழுதுபார்க்கவே முடியாத அளவிற்கு விளங்கும் கழிப்பறைகள், எனப் பள்ளியின் எந்த லட்சணமும் இல்லாத ஒரு இடமாக இருந்து வந்தது.

ஆனால் தற்போது புதிய கட்டிடம், புதிய நூலகம், மற்றும் புதிய கணினி ஆய்வகம், புதிய கழிப்பறைகள் முதலியவற்றோடு கோபிண்டபுர் பள்ளி சிறப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் டெண்டுல்கரின் ஈகை குணமே என்று பள்ளித் தலைமையாசிரியர் உத்தம்குமார் மொஹன்டி தெரிவித்துள்ளார்.

தலைமையாசிரியரின் வேண்டுகோளுக்கிணங்கி டெண்டுல்கர் தனது பாராளுமன்ற நிதியிலிருந்து 76 லட்சத்தை அளித்துள்ளார். இது ஒரு அற்புதமே என்றும் உணர்ச்சிபடக் கூறியுள்ளார்.

யாரென்றே தெரியாத தங்களுக்காக சச்சின் செய்துள்ள உதவி தங்களுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சியை அளிக்கிறது என்று 11வது படிக்கும் உஷா தாஸ் என்ற மாணவி கூறியுள்ளார்.

அருகிலுள்ள அசுயி பல்லிமங்கல் விட்யபீத் பள்ளித் தலைமையாசிரியர் சச்சினிடம் ஒரு தங்கும் விடுதியை அமைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய மேன்மைக்கு அரசையே சார்ந்துள்ளனர். ஏழை குடும்பத்தைச்சார்ந்த இம்மாணவர்கள் காட்டின் வழியே 10 கிலோ மீட்டர் பயணம் செய்து பள்ளிக்கு வரவேண்டியிருப்பதால் பலரும் பள்ளிக்கு வருவதைத் தவிர்த்து விடுகின்றனர்.

ஆகையால் ஒரு தங்கும் விடுதி இந்த பிரச்சினையைத் தீர்க்கும் என்று மற்றொரு பள்ளித் தலைமையாசிரியர் தருன் சக்ரவர்ட்தி கூறியுள்ளார். சச்சினால் கொடுக்கப்பட்ட 20 லட்சம் தங்கள் பள்ளி விடுதி அமைக்க உபயோகிக்கப்படும் என்று 9ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் சாகு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க