• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நவ 10ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர்

November 8, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கு வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த முறை நடைபெறும் இந்த வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி வரும் நவ 10ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் 1 முதல் 12 வகுப்பு வரை படித்தவர்கள், பட்டதாரிகள்,ஐடிஐ மற்றும் டிப்ளமோ தகுதியுடையவர்கள் கலந்துக் கொள்ளலாம்.மேலும்,டிரைவர்,பிட்டர்,டர்னர்,கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற தொழிற்கல்வி பயின்றவர்களும் கலந்துக் கொண்டு பயன் பெறலாம்.

இந்நிகழ்ச்சியில் தனியார் துறையில் வேலையளிப்போர் கலந்து கொண்டு தாங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது.மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் வேலை பெறும் மனுதார்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யபடமாட்டது.இம்மனுதாரர்கள் தொடர்ந்து தங்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க