• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நள்ளிரவு பெற்ற சுதந்திரத்தை நவ.8 நள்ளிரவிலேயே இழந்தோம் – ஸ்டாலின்

November 8, 2017 தண்டோரா குழு

நள்ளிரவு பெற்ற சுதந்திரத்தை நவ.8 நள்ளிரவிலேயே இழந்துவிட்டோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு ஓராண்டு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நாளை கருப்பு நாளாக அனுசரிக்க எதிர்கட்சிகள் முடிவுசெய்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கறுப்பு தினமாக அனுசரித்து திமுக நடத்தும் ஆர்பாட்டம் மதுரை அண்ணாநகரில் நடைபெற்றது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆர்பாட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்பாட்டத்தின் போது பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்,

நவம்பர் 8ம் தேதி வேதனைகள் நிறைந்த நாள் பணமதிப்பு இழப்பு அறிவிப்பு நாள் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்நாள் 125 கோடி மக்களுக்கு துன்பத்தை உருவாக்கியது.நள்ளிரவில் சுதந்திரத்தை பெற்ற நாம், தற்போது நள்ளிரவில் சுதந்திரத்தை இழந்து நிற்கிறோம்.ஒட்டுமொத்த பணப்புழக்கத்தை முடக்கிய ஆட்சி மோடி தலைமையிலான ஆட்சி.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நாள் வரும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கூலித்தொழிலாளிகள், நோயாளிகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வங்கி ATM வாசல்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாண்டார்கள்.பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் பணமதிப்பு ரத்து நடவடிக்கையை தொடர்ந்து எதிர்ப்போம்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மேலும் படிக்க