• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் ஒரே நாளில் இரண்டு லாட்டரிப் பரிசு பெற்ற பெண்

November 6, 2017

அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு பெண்ணுக்கு இரண்டு லாட்டரி சீட்டுக்களில் பரிசு கிடைத்த சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகணத்தை சேர்ந்தவர் கிம்பெர்லி மொரிஸ். அவர் ஒரு மளிகை கடையில் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கினார்.இந்த லாட்டரி சீட்டில் கிம்பர்லிக்கு ரூ. 6 லட்சம் பரிசு விழுந்துள்ளது.லாட்டரி தலைமையகத்தில் இருந்து பரிசு தொகையை பெற்ற பிறகு,ஒரு பல்பொருள் அங்காடிக்கு சென்ற அவர் மற்றொரு லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கினார்.

அதில் அவருக்கு இரண்டாவது முறையாக லாட்டரியில் மீண்டும் பரிசு விழுந்துள்ளது. இந்த முறை கிம்பர்லிக்கு ரூ.2 கோடியே 58லட்சம் பரிசு விழுந்தது.இது குறித்து கிம்பெர்லி மொரிஸ் கூறுகையில்,
“எனக்கு கிடைத்த பரிசு தொகையினை நல்ல முறையில் முதலீடு செய்வேன், மீதம் இருக்கும் தொகையில் என்னுடைய மூன்று குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளேன்” என்று கூறினார்.

மேலும் படிக்க