• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய டாஸ்மாக் கடை திறக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

November 6, 2017 தண்டோரா குழு

தேசிய,மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதைத் தவறாகப் புரிந்துகொண்டு தமிழக அரசு செயல்படுவதாகவும், மாநில நெடுஞ்சாலைகளாக மாற்றி புதிய டாஸ்மாக் கடைகளைத் தமிழக அரசு திறந்துவருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தேசிய மாநில சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,டாஸ்மாக் கடை திறக்க எதிரான வழக்கு விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க