• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் கமல் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் – அசோக் சர்மா

November 4, 2017 தண்டோரா குழு

இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமலை சுட்டுக்கொல்ல வேண்டும் என அகில இந்திய இந்து மகாசாப துணைத் தலைவர் கூறியுள்ளார்.

சமீபகாலமாக அரசியல் மற்றும் சமூக பிரச்சனை குறித்து பேசிவரும் நடிகர் கமல்ஹாசன் பிரபல வார இதழுக்கு கட்டுரை எழுதி வருகிறார். அதில் இந்து தீவிரவாதம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது என்றும் வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உ.பி.யில் கமல் மீது வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில் மீரட்டில் செய்தியாளர்களிடம் பேசி அகில இந்திய இந்து மகாசபா துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா,

இந்து மத உணர்வுகளுக்கு எதிராக பேசுபவர்களுக்கு இந்த பூமியில் வாழ உரிமையில்லை. கமல் மற்றும் அவரை போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்படவேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும் அப்போது தான் மற்றவர்களுக்கு பாடம் கிடைக்கும். கமல் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்கள் நடிக்கும் படங்களை அனைத்து கட்சி உறுப்பினர்க்ளும் புறக்கணிக்க வேண்டும். இந்திய மக்கள் கமல் படங்களை புறக்கணிக்க வேண்டும். இந்து மத உணர்வுகளை புண்படுத்தியவர்களுக்கு மன்னிப்பு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்

மேலும் படிக்க