November 4, 2017
தண்டோரா குழு
மழைநீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் தடுப்புப்பணிக்கு ரூ.1கோடி ஒதுக்கப்பட்டுளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.மேலும், சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
மழைநீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் தடுப்புப்பணிக்கு ரூ.1கோடி ஒதுக்கப்பட்டுளதாகவும்,வெளி மாவட்டங்களிலிருந்து மருத்துவக்குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.