November 4, 2017
தண்டோரா குழு
மழை வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறைக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க அதிக அளவு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக காவல்துறைக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், காவல்துறை பணிகளுக்கு இடையே நிவாரணப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு நன்றி. சீருடை அணிந்தாலும் அணியாவிட்டாலும் அவர்கள் சிறந்த குடிமகன்களாக ஒளிருக்கின்றனர்.இது போன்று தமிழர்களும் ஈடுபடவேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும், மற்றொரு டுவீட்டில், இயக்க தொண்டர்கள் எப்போதும் மழை கால உதவிகளை செய்யும் போது அரசு பணியாளர்களுக்கு இடையூரோ கேலியோ செய்யாமல் உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை எனக் கூறியுள்ளார்.