November 4, 2017
தண்டோரா குழு
நடிகா் கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் இல்லை என இனி யாரும் கூற முடியாது என கூறியிருந்தார். இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், இந்து மதம் குறித்து கமலின் சர்ச்சை பேச்சிற்கு உத்தரப்பிரதேசத்தில் அவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்,அவருக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மதம், கலாச்சாரம், நீதிநெறி பெயரால் பயத்தை விதைப்பதை, பயங்கரவாதம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.