November 3, 2017
தண்டோரா குழு
வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருபவர்கள் அரசு நிர்ணயம் செய்துள்ள வட்டி விகிதத்தை விட அதிகப்படியான வட்டித் தொகை பெறுவதை தமிழ்நாடு கந்து வட்டி தடுப்புச் சட்டம் 2003 முற்றிலும் தடை செய்கிறது.மேலும் தமிழ்நாடு கடன் கொடுப்போருக்கான சட்டத்தின் படி சொத்து அடமானத்துடன் கூடிய கடனுக்கு ஆண்டுக்கு 9 சதவீதத்துக்கும் மிகாமலும்,சொத்து அடமானம் இல்லாத கடனுக்கு 12 சதவீதத்துக்கும் மிகாமலும் மட்டுமே வட்டித்தொகையாக வசூல் செய்ய வேண்டும் என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.எனவே வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்பவர்கள் மேற்படி சதவீதத்தை விட கடன் பெற்றவர்களை அதிகப்படியான வட்டிகேட்டு துன்பறுத்தினலோ,மிரட்டினலோ அவர்களின் உயிர் மற்றும் உடமைக்கு பங்கம் ஏற்படுத்தினாலோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கடன் பெற்றவர்கள் கந்துவட்டி கொடுமையால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் 02-11-2017 மற்றும்
03-11-2017 ஆகிய இரு தினங்களில் மதுரை அழகர் கோவில் சாலையில் இருக்கும் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையாளரை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம்.இந்த புகார் மனுக்களின் மீது அடுத்த 10 தினங்களில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை ஆணையர் அறிவித்துள்ளார்.