November 3, 2017
தண்டோரா குழு
உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் சேவை முடக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் குறுந்தகவல் செயலி வாட்ஸ் ஆப். செய்தி பரிமாறுதல், புகைப்படங்கள், வீடியோக்களை பரிமாற வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சேவை முடக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து குழப்பத்தில் உள்ளனர்.மேலும், வாட்ஸ் அப் முங்கி விட்டதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.