November 3, 2017
தண்டோரா குழு
நான் நலமாக இருக்கிறேன் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல இந்திய மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ள பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா இறந்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் பரவி வந்தது.இதனையடுத்து இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பாடகி பி.சுசீலா,தான் நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது அமெரிக்காவில் இருக்கும் பி.சுசீலா வெளியிட்டுள்ள வீடியோவில்,
நான் அமெரிக்கா வந்துள்ளேன்.நாளை மறுநாள் இந்தியா வந்துவிடுவேன்.நான் நலமாக இருக்கிறன் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.