November 2, 2017
தண்டோரா குழு
இண்டிகோ விமான நிறுவனம் பெங்களூர் மதுரை இடையே புதிய விமான சேவையை தொடங்கவுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களுக்கு பிறகு மதுரை பெங்களூரு இடையே நேரடி விமானங்கள் இயக்கவிருக்கும் மூன்றாவது நிறுவனம் இண்டிகோ விமான நிறுவனம் ஆகும்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 29ம் தேதி முதல் மதுரைக்கும் பெங்களுரூக்கும் இடையே இரவு நேர விமான சேவையை இண்டிகோ நிறுவனம் இயக்கவுள்ளது.இந்த சேவை பெங்களூரிலிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு இரவு 8.45 மணிக்கு வந்து சேரும்.மறுபடியும் இரவு 9.15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு, இரவு 10.20 மணிக்கு பெங்களூரு வந்தடையும் என்று,இண்டிகோ விமானம் நிறுவனம் தெரிவித்துள்ளது.