• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

November 2, 2017 தண்டோரா குழு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு உட்பட 5 வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, குட்கா விவகாரத்தில் சட்டசபை உரிமை குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு, ஓபிஎஸ் உட்பட 12 எம்எல்ஏக்கள் பதவி விலக வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு, பெரும்பான்மையை நிருபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு, முதல்வருக்கு எதிராக ஓட்டளித்த ஓபிஎஸ் பதவி விலக தொடரப்பட்ட வழக்கு உட்பட 5 வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.

மேலும்,இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அப்போது இந்த வழக்குகளை இரண்டு நீதிபதிகளுக்கு மேலடங்கிய அமர்வு விசாரித்தால் நன்றாக இருக்கும் என்றும்,கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்குமா என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க