ஹாங்காங் நகரின் விக்டோரியா துறைமுகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த Cross HarborRace நீச்சல் போட்டியில், சுமார் 2,943 பேர் கலந்துக்கொண்டனர்.
சீனா நாட்டின் ஹாங்காங் நகரிலுள்ள விக்டோரியா துறைமுகத்தில்நடந்த “Cross Harbor Race” நீச்சல் போட்டி நேற்று(அக்டோபர் 31) நடைபெற்றது. அந்த போட்டியில் சுமார் 2,943பேர் கலந்துக்கொண்டனர்.
இந்த நீச்சல் போட்டியின் ஒரு பகுதியான, 17 வயது முதல் 34 வயதுள்ள ஆண்களுக்கான நீச்சல் போட்டி, நேற்று(அக்டோபர் 31) காலை நடைப்பெற்றது.இப்போட்டியில், கீத் சின் சின்-டிங் 11 நிமிடங்களில் நீந்தி வெற்றி பெற்றார். அதேபோல் பெண்களுக்கான போட்டியில், நிகிதா லா பாக்-டங், 11 நிமிடங்கள் 45.6 விநாடிகளில் நீந்தி வெற்றி பெற்றார்.
கடந்த 1906ம் ஆண்டு “Cross Harbor Race” முதன்முதலில் நடைபெற்றது. ஆனால் விக்டோரியா துறைமுகத்தில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக 1978 முதல் 2010ம் ம் ஆண்டு வரையிலான சுமார் 33 ஆண்டுகள் இந்த போட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.கடந்த 2௦11ம் ஆண்டு முதல் இந்த “Cross Harbor Race” மீண்டும் தொடங்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டி நடைபெற்றதால் அங்கு ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்