• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது

November 1, 2017 தண்டோரா குழு

கோவை நகர் புறங்களில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த நவாஷ் என்பவரை கோவை அன்னூர் போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள கோவிலில் உள்ள வேல் திருட்டு போனதாக அன்னூர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது, இதை அடுத்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்தின் பேரில் நவாஷ் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜா என்ற இருவரை அன்னூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்களிடம் சோதனையிட்ட போது வேல் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது, இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும், அதில் நவாஷ் மீது கோவை நகர் புறங்களில் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட 10 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது,

இதனைத்தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க