November 1, 2017
தண்டோரா குழு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில்,
“இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலைகொண்டுள்ளது.இதனால் கடலோர மாவட்டங்கள் மற்றும்தென் தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்யும்.மேலும்,வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழைப்பொழிவு இருக்கும்.சென்னையைப் பொறுத்த வரையில், மழை விட்டு விட்டு பெய்யும் சில நேரங்களில் கனமழை பெய்யும்”.இவ்வாறு அவர் கூறினார்.