• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடாக மாநிலத்தின் முதல் பெண் காவல்துறை தலைவராக நீலாமணி நியமனம்

October 31, 2017 தண்டோரா குழு

கர்நாடாக மாநிலத்தின் முதல் பெண்காவல்துறை தலைவராக நீலாமணி என்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.

ரூபக் குமார் தத்தா இன்றுடன் ஓய்வுபெறுவதையொட்டி, கர்நாடாக புதிய (இயக்குனர் ஜெனரல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்) (DG&IGP)ஆக நீலாமணி என்.ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் தலைமை காவல்துறை அதிகாரி என்ற பெருமையை நீலாமணி பெற்றுள்ளார். தற்போது சிஐடி பிரிவு தலைவராக பணியாற்றி வரும் நீலாமணி என்.ராஜூஜார்கண்ட் மாநிலம் ரூர்கிவை சேர்ந்தவர். இவர் 1983-ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார்.

நீலாமணி நியமனம், அம்மாநில முதலமைச்சர் சித்ராமையாவால் தேர்வு செய்யப்பட்டது என உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார். மேலும், நீலாமணி என்.ராஜூவை தலைமை காவல்துறை அதிகாரியாக நியமித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என்று கர்நாடாகவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் தெர்வித்துள்ளனர்.

மேலும் படிக்க