• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

7 வயதுசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு தர்ம அடி

October 31, 2017 தண்டோரா குழு

ஆம்பூர் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(50). இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில்,இவர் அதே பகுதியில் உள்ள வாய் பேசமுடியாத 7 வயது சிறுமிக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து பாலாற்றங்கரைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சிலர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பழனிவேலுக்கு சரமாரியாக அடி உதை கொடுத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.பின்னர் தகவல் அறிந்த அங்கு வந்த ஆம்பூர் கிராமிய போலீசார் பொதுமக்களிடமிருந்து பழனிவேலை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.பின்னர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமணைக்கு அழைத்துச்சென்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க