• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாயை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு சுற்றுலா சென்ற மகன்

October 31, 2017 தண்டோரா குழு

மேற்கு வங்கத்தில், 96 வயதான தாயை,வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு, விடுமுறைக்கு சென்ற மகனின் இரக்கமற்ற செயல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின், அனந்தபூர் நகரில், சபிதா நாத்(96), அவருடைய மூத்த மகன் பிகாஷ் உடன் வசித்து வருகிறார். அவருடைய மகன் சுற்றுலா செல்ல முடிவு செய்திருந்தார். அவருடைய தாய் சபிதா, அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் கதவுகளை வெளியே பூட்டிவிட்டு, சுற்றுலா சென்றுவிட்டார்.

இந்நிலையில் சபிதாவின் மகள்கள் தாயாரை பார்க்க வந்தபோது, கதவு பூட்டப்பட்டு இருப்பதை கண்டு, இருவரும் சபிதாவின் அறையின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர்.அங்கே வாந்தி நாற்றத்துடன் சபிதா அறையில் படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உடனே அருகிலிருந்தவர்கள் உதவியுடன், கதவை உடைத்து,அவரை அங்கிருந்து மீட்டு தங்களுடன் அழைத்து வந்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து சபிதாவின் மகள்கள் ஆனந்தபூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

இது குறித்து சபிதா கூறுகையில்,

“நான் தூங்கி எழுந்தபோது, வீட்டில் யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் விடுமுறைக்கு சென்றுவிட்டனர் என்று என்னால் உணர முடிந்தது. என்னால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் சாப்பிட சில பிஸ்கட் இருந்தது.நான் அவற்றை சாப்பிட முயன்றபோது, என்னால் சாப்பிட முடியவில்லை.வாந்தி எடுக்கவேண்டும் போலிருந்தது. ஆனால் கழிவறைக்கு செல்ல கூட உடம்பில் பெலன் இல்லை. அதனால், அறையிலேயே வாந்தி எடுத்து விட்டு, அறையை சுத்தம் செய்தேன்” என்று கூறினார்.

மேலும் படிக்க