• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சவூதியில் விளையாட்டு மைதானத்தில் பெண்கள் நுழைய அனுமதி

October 30, 2017 தண்டோராகுழு

சவுதி அரேபியாவிலுள்ள விளையாட்டு மைதானத்திற்குள் முதல்முறையாக பெண்கள் நுழைய அனுமதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியா நாட்டில், பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படிருந்தது.அந்த நாட்டில் பெண்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால், ஆண்கள் துணை மிகவும் அவசியம். பாலியல் பிரிவினை குறித்த கடுமையான விதிகள் இருந்ததால், அதைபோல் விளையாட்டு அரங்கங்களுக்கு செல்ல பெண்களுக்கு நீண்டகாலமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், தற்போது சவூதி அரேபியா அரசு,பல நவீன பொருளாதார திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவும் என்று கருதப்படுகிறது. அவ்வகையில், தற்போது அந்த நாட்டின் பெண்களுக்கு பல சலுகைகளை மன்னர் சல்மான் அறிவித்து வருகிறார். இதனால் சவூதி அரேபியா நாட்டின் பழமைவாத கட்டுப்பாடுகளைநீக்கி, முற்போக்கு சிந்தனை உடைய நாடாக மாற்றும் முயற்சியை அந்நாட்டின் அரசர் சல்மான் எடுத்து வருகிறார்.

அதன்படி, சவூதி நாட்டின் கடற்கரை விடுதிகளில் பெண்கள் ‘பிகினி’ நீச்சல் உடை அணியவும், கார் ஓட்டவும் அந்நாட்டின் மன்னர் சல்மான் அனுமதி வழங்கியுள்ளார். இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்குள் பெண்கள் நுழைய மன்னர் சல்மான் அனுமதித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“2018ம் ஆண்டு, தொடக்கத்திலிருந்து குடும்பங்களுக்கு இடமளிக்க ரியாட், ஜெட்டா மற்றும் டாம்மன் ஆகிய இடங்களில் மூன்று விளையாட்டு அரங்கங்குகளை தயாரிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது” என்று பொது விளையாட்டு ஆணையம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

மேலும், கடந்த மாதம்ரியாத்தில், கால்பந்து போட்டி நடக்கும் ஒரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற, தேசிய நாள் கொண்டாட்டத்தில் முதல்முறையாக நூற்றுக்கணக்கான பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க