உயிருடன் இருப்பவர்களின் புகைப்படத்துடன் பேனர் வைக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது இடங்களில் பேனர்கள் வைக்கப்படும்போது உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களுக்கு தடை விதித்து நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையிட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் அனைவருக்கும் விளம்பரப்படுத்த உரிமை உள்ள நிலையில் தனி நீதிபதி உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது. விளம்பரம் செய்பவரின் புகைப்படத்தை விளம்பரத்தில் போடக்கூடாது என்று எப்படி கூற முடியும்? என்றும் அதற்காக அவர் இறக்கும் வரை காத்திருக்க வேண்டுமா ? என்றும் கேள்வி எழுப்பப்பினார். மேலும், விதிகளை மீறி பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்குமாறும் கோரப்பட்டது.
அப்போது அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறப்படும் நிலையில் பல்வேறு இடங்களில் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிபதிகளின் வீட்டுக்கு முன்பு வைக்கப்பட்ட பேனர்களே இன்னும் அகற்றப்படவில்லை என்றும் அகற்றப்பட்டாலும் மீண்டும் புதிய பேனர்கள் வைக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பேனர்கள் தொடர்பாக அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பேனர்களுக்கு எதிரான ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகவும் மேல் முறையீட்டு வழக்கு தற்போது தொடக்க நிலையில் உள்ளதால் வழக்கு முடியும் வரை தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிப்பது தொடர்பாக எதுவும் கூற முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை வரும்
30ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு