• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘ஜோசப் விஜய்’ எனும் பெயரில் அறிக்கை வெளியிட்டார் நடிகர் விஜய்!

October 25, 2017 தண்டோரா குழு

‘மெர்சல்’ படம் வெற்றி பெற காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்து ‘ஜோசப் விஜய்’ எனும் பெயரில் நடிகர் விஜய்அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளியன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒருபுறம் படத்திற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் மறுபுறம் ஆதரவும் இருந்தது. படத்திற்கு எவ்வளவோ எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை எல்லாம் உடைத்தெறிந்து வெற்றிகரமாக வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் தற்போது இதுகுறித்து தளபதி விஜய் அனைவருக்கும் நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அதில்,” மாபெரும் வெற்றியடைந்துள்ள மெர்சல் படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச் சார்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள் பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதளம் பண்பலையை சேர்ந்த ஊடக நண்பர்கள் எனது நண்பா, நண்பிகள் பொது மக்கள் அனைவரும் எனக்கும் மெர்சல் படககுழுவினருக்கும் மிகபெரிய ஆதரவு தந்தார்கள்.

மேலும் மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும் ஆதரவு கொடுத்ததற்கும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”. எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க