• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிசுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி

October 25, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்றிலிருந்த குழந்தை சீக்கிரம் வெளியே வரவேண்டும் என்பதற்காக, அந்த குழந்தைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தை சேர்ந்த கெலி பே, அங்குள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். அவர் மூன்றாவது முறையாக கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவரை அங்கிருந்த மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி அவருடைய கணவர் சேர்த்தார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இன்னும் சிறிது நேரத்தில் தனக்கு குழந்தை பிறந்துவிடும் என்று ஆவலோடு இருந்தார் கெலி. ஆனால்,அவருக்கு ஏற்பட்ட பிரசவ வலி நின்றுவிட்டது. அதன் பிறகு தனக்கு பிரசவ வலி வரும் என்று காத்திருந்தார்.சில நேரம் காத்திருந்த அவர் சோர்வடைய தொடங்கினர்.

உடனே தன்னுடன் பணியாற்றி வரும் லின் டேவிஸ் என்னும் நீதிபதியை தொடர்புக்கொண்டு, தன் வயிற்றிலிருக்கும் குழந்தை சீக்கிரம் வெளியே வரவேண்டும் என்று நோட்டீஸ் ஒன்றை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவருடைய கோரிக்கை ஏற்றுக்கொண்ட லின், நோட்டீஸை ஒன்றை அனுப்பினார்.

நீதிமன்றத்தில் இருந்து வந்த நோட்டீசை, தனது வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு படித்து காண்பித்தார் கெலி பே. சுமார் 12 மணிநேரம் கழித்து அந்த குழந்தை வெளியே வந்தது. அந்த குழந்தைக்கு கிரேத்செல் கொன்னி ஹான்சென் என்று பெயர் சூடப்பட்டது. கெலி பே மற்றும் அவருடைய குழந்தை நலமாக உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க