• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மும்பையில் இரண்டு துண்டுகளாக இறந்து கிடந்த திமிங்கலம்!

October 25, 2017 தண்டோரா குழு

மும்பை கடற்கரையில் 40 அடி நீளமுடைய திமிங்கலத்தின் உடல் இரண்டு துண்டுகளாக பிளந்து இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் உள்ள கலாபா கடற்கரையில்கடந்த திங்கட்கிழமை (அக் 23),சுமார் 40 அடி நீளமுடைய ப்ரைடே இனத்தை சேர்ந்த திமிங்கிலம் ஒன்றின் உடல் இரண்டாக துண்டுகளாக பிளந்து இறந்து கிடந்தது. இச்சம்பவத்தை பார்த்தவர்கள் உடனடியாக பிஎம்சி அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்.

தகவல் அறிந்த பிஎம்சி அதிகாரிகள் கலாபா கடற்கரைக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது, 26 அடி நீளமுள்ள பாகம் ஒரு புறமும், 14 அடி நீளமுள்ள மற்றொரு பாகம் மற்றொரு இடத்திலும் இருப்பதை கண்டார்கள்.மேலும், அந்த திமிங்கிலத்தின் உடல் அதிக அளவில் சிதைந்துபோயிருந்தது.

பி.எம்.சி அதிகாரிகள் உடனடியாக தேசிய வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். அந்த அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட சோதனையில், அந்த திமிங்கலம் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு இறந்திருக்கும் என்றும், கப்பலில் மீது அந்த திமிங்கலம் மோதி காயமடைந்திருக்ககூடும் என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க