ஜெர்மனைச் சேர்ந்த தம்பதிகளான ஸ்டெஃபான் – ஜெனின் ஆகியோர் கடந்த ஆண்டு முதல் பிரத்யேக வாகனம் மூலம் உலகம் முழுவதும் சாலை மார்க்கமாகவே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பயணத்தில் அல்பேனியாவில் அவர்களுடன் இணைந்த நாய்க்கு லுக் பெயரிட்டு தங்கள் பயணத்தில் இணைத்துக் கொண்டனர். இதற்கிடையில்,கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்னை வந்த ஜெர்மன் தம்பதியினர் மெரினா கடற்கரையில் நாயைத் தொலைத்தனர். சென்னையின் பல்வேறு இடங்களில் அந்த நாயை தேடிய அவர்கள் தன்னார்வலர்களிடமும் உதவி கேட்டிருந்தனர்.மேலும், நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 30ஆயிரம் ரூபாய் தருவதாகவும் அறிவித்தனர்.
இந்நிலையில் விசா காலம் முடிந்ததால் அவர்கள் சென்னையில் இருந்து வருத்தத்துடன் புறப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பின் நாய் கண்டுபிடிக்கப்பட்டதாக தன்னார்வலரான விஜயா நாராயணன் மூலம் ஜெர்மன் தம்பதியினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நேபாளத்தில் சுற்றுப் பயணத்தில் இருந்த ஸ்டெஃபான் – ஜெனின் தம்பதி சென்னைக்கு புறப்பட்டு வந்தனர். ஜெர்மன் தம்பதியினரை பார்த்ததும் லுக் ஓடி வந்து அவர்களிடம் கொஞ்சி விளையாடிய நெகிழ்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
தங்களின் செல்ல நாய் லூக்கை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையை தாங்கள் இழந்திருந்த நிலையில் மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்திருப்பதாக ஜெர்மன் தம்பதிகள் ஸ்டெஃபான் – ஜெனின் ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும், லுக் எங்களை சுற்றிச் சுற்றி வந்தான். அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். இனி அவனை தொலைக்க மாட்டோம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றும் தொலைந்து போய் 160 நாட்களுக்குப் பின் திரும்பக் கிடைத்திருப்பது அற்புதமான அனுபவம் என்றும் அவர்கள் கூறினர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு