• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீட்டை விட்டு ஓடி வரும் இளைஞர்களை குறி வைக்கும் திருநங்கைகள்-மாவட்ட ஆட்சியரிடம் புகார்

October 24, 2017 தண்டோரா குழு

வீட்டை விட்டும் ,தேர்வில் தோல்வியடைந்தும் ஓடி வரும் இளைஞர்களை குறி வைக்கும் திருநங்கைகள், இவர்களை பாலியல் மற்றும் திருட்டு தொழிலில் ஈடுபடுத்தி அதிக லாபம் ஈட்டுவதாக திருநங்கையே புகார் செய்துள்ளார்.

கோவையில் ஐந்து கும்பல்களாக செயல்படும் தாய் அமைப்புகள். திருநங்கைகளை பாலியல் மற்றும் திருட்டு தொழிலில் ஈடுபடுத்தி தினமும் இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்து ஐநூறு வரை சம்பாதிப்பதாக குற்றச்சாட்டுகின்றார் மாயாலைலா.

துத்துக்குடியைச்சேர்ந்தவர் மாயாலைலா திருநங்கையான இவர் கோவையிலுள்ள திருநங்கை லைலாவின் குழுவில் இணைந்துள்ளார்.இவரை கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்குமேல் வைத்து தினமும் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதித்துவிட்டு லைலாவின் கணவர் விஷ்ணு என்கிற பூஜாவிடம் விற்றுள்ளார்.

இவர் ஈட்டிய வருமானம் அனைத்தையும் வைத்துக்கொண்டு துன்புறுத்துவதாகவும், முப்பது லட்ச ரூபாயை மீட்டுத்தரக்கோரியும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேற்றைக்கு மனு அளித்தார். இதில் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலகம் அருகே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அழைத்துச்சென்றனர்.

மாயலைலா திருநங்கைகள் மோசடி செய்வது குறித்து பேசுகையில், திருநங்கைகளில் அது சின்னவீடு,பெரிய வீடு, லாலா காரர் வீடு, பூனாகாரர் வீடு, சக்களகாரர் வீடு என ஐந்து ஜாதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வீட்டை விட்டும், பள்ளித்தேர்வில் தோல்வியடைந்து வெளியே வரும் மாணவர்களை அடையாளம் கண்டு , அவர்களிடம் அன்பாக பேசி அழைத்து வந்து பாலியல் மற்றும் திருட்டு தொழில் ஈடுபடுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.மேலும் ஒரு இளைஞரை கூட்டி வருபவர்களுக்கு இருபதாயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதாகவும், அவர்கள் தினமும் சம்பாதிக்கும் தொகையை வாங்கிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

ஒரு நபருக்கு பயிற்சியளிக்க ஐம்பதாயிரம் வாங்குவதாகவும், இரண்டு வருடங்கள் பாலியல் மற்றும் திருட்டில் ஈடுபடுத்தி தினமும் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதித்து விட்டு அவர் பிரச்சனை செய்தால் மற்ற கும்பலிடம் அவரின் அழகுக்கு ஏற்றாற்போல் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை விற்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும் அந்த பணத்தை ஏழு மாதங்களுக்குள் அடைத்து விட்டாலும் இரண்டாண்டுகள் கட்டாயமாக அவர்களுக்கு தினமும் இரண்டாயிரம் கொடுத்தாக வேண்டும் என மிரட்டுவதாகவும், அவர்கள் ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தால் திருநங்கையாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்துகொடுக்கின்றனர்.

பாலியல் தொழில் செய்யும் இவர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் சொன்னால் காவலர்கள் அவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மிரட்டுவதாகவும், தனியாக வசிக்க முடியாமல் மீண்டும் அவர்களிடம் சேர்ந்துவிடுமாறு தொந்தரவு கொடுக்கின்றனர்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் பாலியல் தொழிலை விட்டு வெளியே வந்தபோதும் மிரட்டலுக்கு பயந்து மீண்டும் அவர்களிடமே சேர்ந்துள்ளனர்.அவர்களுக்கு உதவ சென்ற தன்னை சாய்பாபா காலனியில் வைத்து கத்தியால் குத்தப்பட்டதாக கூறினார்.

மேலும்,தன்னுடைய குடும்பத்தினரை மிரட்டுவதாகவும், தன் தம்பியின் கல்யாணத்தை நிறுத்த முயற்சிப்பதாகவும்,குலசேகரன்பட்டிணத்தில் தன்னை கொல்ல முயற்சி நடந்ததாகவும் தெரிவித்தார்.

தன்னை வைத்து சம்பாதித்த பணத்தை கேட்டால் காவலர்களை வைத்து மிரட்டுவதோடு காவலர்கள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், புகார் கொடுக்க சென்றாலும் அவர்களுக்கு தகவல் கொடுத்து பணத்தை வாங்கிக்கொண்டு தங்களையே அடித்து மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளரிடம் மாயாலைலா மற்றும் கல்பனா,ஜெய்ஸ்ரீ ஆகியோரை பெண் காவலர்கள் அழைத்துச்சென்றனர்.

இந்த புகார் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்தால் புதிதாக கோவையில் திருநங்கைகள் உருவாகாமல் இருப்பார்கள். காவல் துறை கடமையை செய்யுமா?

மேலும் படிக்க