October 24, 2017
தண்டோரா குழு
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘மெர்சல்’ படம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
ஒருபுறம் படத்தில் வரும் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வலியுறுத்தி வருகின்றனர். மறுபக்கம் இப்படத்திற்கு பல பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி படத்திற்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில் இயக்குனர் சமுத்திரக்கனி மெர்சல் படத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “மெர்சல் மிரட்டுதா? மிரளும் தேசம் … மீட்போம் உரிமையை… காப்போம் தமிழனை … அடங்க மறு” என்று குறிப்பிட்டுள்ளார்.