நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த 4 பேரில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைப்பெற்றது. அப்போது, நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் 5 வயது மதிசரண்யா, ஒன்றரை வயதுள்ள அட்சய பரணியா ஆகியோர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற அரங்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்தனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். எனினும் 2 குழந்தைகள் உட்பட நான்கு பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்புலட்சுமி மற்றும் குழந்தை மதுசரண்யா ஆகியோர்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற இருவரும் பலத்த தீக்காயங்களோடு பாளையங்கோட்டை மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அச்சன்புதூர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி, தளவாய்ராஜ் ஆகியோரிடம் விசாரணை நடைபெறகிறது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்