• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜப்பான் பிரதமராக அபே மீண்டும் தேர்வு – பிரதமர் மோடி வாழ்த்து

October 23, 2017 தண்டோரா குழு

ஜப்பான் பிரதமராக பதவியேற்கும் ஷின்சோ அபேவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 28ஆம் தேதி ஜப்பான் நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டார்.இந்நிலையில் ஜப்பானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 465 இடங்களில் 1200 போட்டியளர்கள் போட்டியிட்டனர்.இதில் 312 இடங்களில் ஷின்சோ அபே கட்சி வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்து ஷின்சோ அபே மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி,

“என் இனிய நண்பர் அபே தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இரு நாடுகளின் உறவு மேலும் வலுப்படும் என்ற நம்பிக்கை உள்ளது”. என்று டுவிட் செய்துள்ளார்.

மேலும் படிக்க