• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருத்து சுதந்திரம் சினிமா ஊடகத்திற்கும் கலைஞர்களுக்கும் கிடையாதா? நடிகர் சங்கம் அறிக்கை

October 21, 2017 தண்டோரா குழு

ஒரே நாட்டில் அவர்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் சினிமா ஊடகத்திற்கும் கலைஞர்களுக்கும் கிடையாதா? என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விஜயின் மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் மெர்சல் படத்திற்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தற்போது”மெர்சல்” திரைப்படத்தில் வரும் கருத்துக்கள் வசனங்கள் அனைத்தும் சில அரசியல் அமைப்புகள் பத்திரிகைகள் ஊடகங்கள், இணைய தளங்கள், சமூக வலைதளங்கள் மூலமாகவும் விமர்சித்து வருபவை தான். ஒரே நாட்டில் அவர்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் சினிமா ஊடகத்திற்கும் கலைஞர்களுக்கும் கிடையாதா? மத்திய அரசால் நிர்வாகிக்கப்படும் தணிக்கைக்குழு அதற்கான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனுமதியளித்த பின் வெளியிடப்படும் திரைப்படங்களை தனி நபர்களின் விமர்சனங்களுக்காக மாற்றியமைப்பதோ அல்லது திரையிடாமல் தடுப்பதோ கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குகிறது.

தணிக்கை செய்யப்பட்டு வெளி வந்த மெர்சல் திரைப்படத்தில் உள்ளவைகளை யாருக்காகவும் நீக்க கூடாது என்பதும் இது போன்ற செயல்கள் பிற்காலத்தில் பல பெரிய பிரச்சனைகள் உருவாக காரணமாகும் என்று கூறியுள்ளது.

மேலும் படிக்க